Skip to main content

தமிழ்நாட்டை காற்று மாசு இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை தேவை!அன்புமணி 

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

 


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை:    ’’உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடனின் ஸ்டாக்கோம் நகரில்  கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் (World Environment Day) கொண்டாடப்படுகிறது. ‘காற்று மாசுபாட்டை முறியடிப்போம்’ (Beat Air Pollution) என்பதை இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன் வைத்துள்ளது. 

 

an

 

காற்று மாசுபாட்டினால் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உலகிலேயே மிகவும் மாசுபட்ட நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியா. இங்கு ஆண்டுக்கு 12 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டின் கணக்கீட்டின் படி இந்திய மக்கள் தொகையில் 77% பேர் காற்றுமாசு காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழலில், காற்றுமாசை தடுக்கும் நடவடிக்கைகளை  போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நகர்ப் புறங்களிலும், மாநகரங்களிலும் காற்றுமாசு மிக வேகமாக அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும்.

 

சென்னையில் தனியார் வாகனங்களின் பெருக்கம், முறையான மாசுக்கட்டுப்பாடு சோத னைகள் இல்லாமை, சாலைகளிலும் தெருக்களிலும் படிந்துள்ள புழுதி, பொதுப் போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை, குப்பை, கட்டடக் கழிவுகள், டீசல் ஜெனரேட்டர் உள்ளிட்டவை காற்றுமாசுக்கு காரணமாக உள்ளன.

 

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான தேசிய தூயக் காற்று திட்டத்தை (National Clean Air Programme - NCAP) இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 10.01.2019 ஆம் நாள் வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டிற்குள் காற்று மாசு அளவை 20%- 30% அளவு குறைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய தூயக் காற்று திட்டத்தில் 42 நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தமிழ்நாட்டில் அரசு செயலாக்க வேண்டும். குறிப்பாக, கடலூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டை, மேட்டூர் போன்ற தொழிற்சாலை மாசுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூயக்காற்றை மீட்டெடுக்க வேண்டும்.

 

சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும் நகர்ப்புறங்களிலும் காற்று மாசுபாட்டு நடவடிக்கைகளை உடனடியாக வேகப்படுத்த வேண்டும். நகரங்களில் சாலைகளையும் தெருக்களையும் புழுதி இல்லாமல் பராமரித்தல், மாசுபடுத்தும் வாகனங்களை திடீர் சோதனைகள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல், மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகமாக்குதல், பசுமை பகுதிகளை பாதுகாத்து மரங்களின் எண்ணிக்கையை அதிகமாக்குதல், திடக்கழிவு மேலாண்மை விதிகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

 

காற்று மாசுபாட்டு நடவடிக்கைகளை உடனடியாகவும் தீவிரமாகவும் நடைமுறைபடுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் தூய காற்றை மீட்டெடுக்க உலக சுற்றுச்சூழல் நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.’’   
 

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.

Next Story

“அ.தி.மு.க வாக்காளர்களே..” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Anbumani Ramadoss appeal to ADMK voters

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க வேட்பாளரான சவுமியா அன்புமணியை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தருமபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணி ஐ.நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றியும், பெண் குழந்தைகளை பற்றியும் குரல் கொடுத்தவர். எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 

நாம் கால காலமாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவை எடுங்கள். அதிமுக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவதில்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்” என்று கூறினார்.