பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ், நேற்று(31.5.2022) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய் பிரபாகரனும் உடனிருந்தனர்