Advertisment

“மீனவர் சிக்கலுக்கு உடனடியாகத் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கைகள் தேவை” - அன்புமணி

Anbumani condemned the arrest of 15 more Tamil Nadu fishermen

தமிழக மீனவர்கள்மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகை மாவட்டத்தைச் சேர்ந்த15 மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற போதுஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைசிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியமாக மீன் பிடிக்க உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

Advertisment

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்முடிவே இல்லாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த 10-ஆம் தேதி தான்வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களைஇலங்கை கடற்படையினர்கைது செய்தனர். அதனால், அந்தப் பகுதிகளில்ஏற்பட்ட பதட்டமும், கவலையும்விலகுவதற்குமுன்வாகவேமேலும் 15 மீனவர்களைசிங்களக் கடற்படை கைது செய்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாது.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்வது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது,அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம்தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது தான் இலங்கை அரசின் நோக்கமாக உள்ளது. இந்த உண்மையை தெரிந்திருந்தும் அதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நியாயமல்ல.

இந்தியா - இலங்கைஅரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.மீனவர்கள் கைது தொடர்பான வழக்கை விசாரித்தசென்னை உயர்நீதிமன்றமும்அதையே அறிவுரையாக வழங்கியிருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Fishermen pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe