/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_19.jpg)
விழுப்புரம் மாவட்டம்விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டப்புலியூரில் அன்பு ஜோதி அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த அறக்கட்டளையைகேரளாவைச்சேர்ந்த ஜூபின் பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் எனப் பலரும் பராமரிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பெண் ஒருவர் இந்த அறக்கட்டளை மீதுபாலியல் புகார் ஒன்றை அளித்தநிலையில், போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்ததில் அறக்கட்டளையின் காப்பகத்தில் இருந்த 13 பெண்கள் உட்பட இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 25 பேரும் சமூக நலத்துறையின்சார்பில் இயங்கும் அரசு காப்பகத்துக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow Us