anbil img.jpg

வருகின்ற 20ஆம் தேதியன்று, மத்திய அரசைக் கண்டித்து ஆங்காங்கே இல்லங்களின் முன் நடைபெறுகின்ற போராட்டத்திற்கு ஆதரவு தரக் கோரி திருச்சி தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisment

பெட்ரோல் விலை, எரிவாயு விலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கல்போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்தும் மத்திய அரசினைக் கண்டித்தும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெறவிருக்கிறது. இதில்,திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் இல்லங்களில்ஆங்காங்கே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற வேண்டும்.

Advertisment

மக்களிடையே இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்ததமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கட்டளையைத் தம் கடமையாக ஏற்று, கூட்டனி கட்சி நிர்வாகிகள் சிறப்பாக நடத்திட வேண்டுமென கலந்துரையாடினார்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இக்கலந்துரையாடலில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சமது,காங்கிரஸ் கோவிந்தராஜ், ஜவகர், கம்யூனிஸ்ட் c.p.m ஜெயசீலன், ராஜா, கம்யூனிஸ்ட் சிபிஐ இந்திரஜித், திராவிடமணி, மதிமுக வெல்லமண்டி சோமு, தமிழ்மாணிக்கம்,விடுதலைச் சிறுத்தைகள் அருள், முத்தழகன், கொங்குநாடு மக்கள் கட்சி சேகர், தமிழக வாழ்வுரிமை இயக்கத்தைச் சார்ந்த ராயல்ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அபிபுல்ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி பயாஸ், திராவிடர் கழகம் ஆரோக்கியராஜ்ஆகியோர் பங்குபெற்றனர்.