
2,401 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் ரூபாய் 2401 கோடி மத்திய அரசு விடுவிக்கவில்லை. 2023-2024 ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடி அதேபோல், 2024-2025 ஆம் ஆண்டுக்கான தவணைத் தொகை 2,152 கோடி ரூபாய் என தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்ட கூறுகளை நிறைவேற்ற மத்திய அரசு நிதி தரவில்லை.
திட்ட ஏற்பளிப்பு குழு அங்கீகரித்த மத்திய அரசின் 60 சதவீத பங்கான ரூபாய் 2,152 கோடி இதுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 17,632 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது' என தெரிவித்துள்ளார்.