Skip to main content

அராஜகம் செய்த இளைஞர்கள்; ஜாமீன் எல்லாம் கிடையாது - குட்டு வைத்த நீதிபதி

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

Anarchic youth; There is no bail at all - the blind judge

 

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ளது மீனாட்சி அரசு கலைக் கல்லூரி. கடந்த நான்காம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, ஊர்தியின் முன்பாக சில இளைஞர்கள் மது போதையில் பைக்கில் அதிவேகத்துடன் ஒலி எழுப்பிக்கொண்டு இடையூறு செய்தவாறு சென்றனர். இதனைக் கண்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மேலும் அந்த இளைஞர்கள் கல்லூரி மாணவிகளைப் பார்த்துத் தகாத வார்த்தைகளால் கத்தியபடிச் சென்றனர்.

 

அப்பொழுது கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை ''ஏன் இப்படி காலேஜ் வாசல்ல அநியாயம் பண்றீங்க'' எனத் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மது போதையிலிருந்த இளைஞர்கள் கும்பல், மாணவியின் தந்தையைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, ஹெல்மெட்டைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மதுரையின் மையப் பகுதியாக இருக்கும் கோரிப்பாளையத்தில் இப்படி ஒரு சம்பவம் அதுவும் அரசுக் கல்லூரி வாசலில் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதேபோல் மதுரையில் உள்ள லேடி டோக் மகளிர் கல்லூரிக்குள் இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர் கும்பல் கல்லூரி காவலாளியை எட்டி உதைத்துத் தாக்கியதோடு அங்கு வந்த மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனடிப்படையில் முத்து நவேஷ், சூர்யா, அருண்பாண்டியன், சேது பாண்டியன், மணிகண்டன், முத்து விக்னேஷ், வில்லியம் பிரான்சிஸ், அருண் உள்ளிட்ட பலரை கைது செய்த போலீசார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

 

ஆனால் தங்களுக்கு ஜாமீன் வேண்டுமென மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இளைஞர்கள் தரப்பிலிருந்து மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை நீதிபதி வடமலை விசாரித்தார். அப்பொழுது போலீசார் தரப்பில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைப்பார்கள். மேலும் அவர்கள் கல்லூரி காவலாளியைத் தாக்கியதோடு வாகனத்தைக் கொண்டு அவரைக் கொல்ல முயன்றுள்ளனர். கல்லூரி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். மேலும் இதில் சில இளைஞர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தனர். இதனை ஏற்ற நீதிபதி, யாருக்கும் ஜாமீன் கிடையாது என அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.