Advertisment

தவெக நிர்வாகி மரணம்-கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்

 Bussy Anand cried; Actor Vijay mourns

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியைத் தொடங்கி இருக்கும் நிலையில் கட்சிக்கான முதல் மாநாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியின் வி.சாலை பகுதியில் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அக்கட்சியின் நிர்வாகிகள் நாள் கணக்கில் விக்கிரவாண்டியிலேயே தங்கி மாநாட்டிற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் என்பவரும் கடந்த சில நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டு பணிகளில் ஈட்டுப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் விக்கிரவாண்டியில் இருந்து புதுச்சேரியில் உள்ள வீட்டிற்குத் திரும்பிய சரவணன், தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்

Advertisment

இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு பணிகளை கவனித்து வந்த மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரவணனின் இல்லத்திற்கு சென்ற தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவரது உடலைப் பார்த்து கதறி அழும் காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகநிர்வாகி சரவணன் மறைவுக்கு கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள அந்த இரங்கல் குறிப்பில், 'என் மீதும், கட்சி மீதும் தீரா பற்று கொண்டவர் சரவணன். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர்மற்றும் உறவினர்களுக்குஎன் ஆழ்ந்த அனுதாபங்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tvk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe