திருச்சியில் அமைந்துள்ள பெல் நிறுவனத்தில், நியாத் சகியா என்பவர் பணிபுரிந்துவருகிறார். இவர் தன்னுடைய வீட்டிற்கு புதிய மின் இணைப்பு வேண்டும் என நவல்பட்டு மின் பகிர்மான கழகத்தில் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மின்வாரிய ஆய்வாளர் விக்டர், மின் இணைப்பு கொடுப்பதற்கு 18 ஆயிரம் ரூபாய் கமிஷன் கேட்டுள்ளார். கமிஷன் தர மறுத்த பெல் ஊழியர் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தார். அதன் பின் அவர்கள் சொன்னபடி ரசாயன தடவிய நோட்டை ஆய்வாளர் விக்டரிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், மின்வாரிய ஆய்வாளர் விக்டருக்கு தூண்டுகோலாக இருந்த தப்பியோடிய உதவி பொறியாளர் கமருதீனை தேடிவருகின்றனர்.