திராவிட இயக்க சிற்பியாகவும், தான் வாழும் காலம் வரை கொள்கை மாறா பகுத்தறிவாளர் கழகத்தின் காவலனாகவும் திகழ்ந்த, திமுக முன்னாள் தலைமை இலக்கிய அணி செயலாளர் ச.அமுதன் இயற்கை எய்தினார்.
அமுதன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார் மு.க.அழகிரி. முக்கிய பிரமுகர்களும், கழகத் தோழர்களும் அமுதனுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அப்போது, அமுதன் வீட்டில் கழகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் அவர் வாழ்ந்த காலம் குறித்து பேச்சு எழுந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கழக நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் பங்கேற்று 32 தடவை சிறை சென்றிருக்கிறார் அமுதன். மிசா கைதியாகவும் இருந்திருக்கிறார். கலைஞரிடமும் பேராசிரியரிடமும் நெருங்கிப் பழகியவர். எந்தச் சூழ்நிலையிலும் கட்சி மாறாமல், திமுககாரராகவே வாழ்ந்தவர். விருதுநகர் மாவட்ட அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாமல்தான் மு.க.அழகிரி ஆதரவு நிலை எடுத்தார். திமுக சீனியராகவும், தொடர்ந்து தனது ஆதரவாளராகவும் இருந்ததால், அமுதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது கண் கலங்கினார் மு.க.அழகிரி.
‘வைரத்துக்கு முன் வைக்கப்பட்ட கூழாங்கல்!’ என்னும் தலைப்பில் முரசொலியில் உடன் பிறப்புக்களுக்கு எழுதிய கடிதத்தில் ச.அமுதன் குறித்து இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர் –
‘தங்கள் வாழ்க்கையில் சுழன்றாடுகிற எந்த ஒரு சம்பவத்தையும் பத்திரமாகப் பாதுகாத்து – அச்சம்பவம் எந்த வடிவில் இருந்தாலும் அதனைப் புதையல் போலக் கட்டிக் காத்திடும் பழக்கம் உலகில் ஒரு சிலருக்கே உண்டு. அந்தத் திறன் வாய்ந்தவர்களில் – அத்தகைய அக்கறை உள்ளவர்களில் தம்பி அமுதனும் ஒருவர்’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
கலைஞர் எழுதிய அந்தக் கடிதத்தில், ’அமுதன் – தன் குறிப்பு’ என்ற நூலில் வெளியான ச.அமுதனின் சூளுரையும் இடம் பெற்றிருக்கிறது.
‘தலைவா! உன் நெஞ்சத்தில் இருக்குமளவுக்கு கடந்த நாற்பத்தி ஐந்து ஆண்டுக்காலமாக, என் பால்ய காலம் தொட்டு வெறிபிடித்த கழகத் தோழனாகப் பணிபுரிந்து வந்துள்ளேன். வாழ்நாள் முழுவதும் தடம்புரளாத் தம்பியாகப் பணிபுரிவேன் என்று உறுதி கூறுகிறேன்.’
கலைஞரிடம் கூறியபடியே, அவருடைய தடம்புரளாத் தம்பியாக வாழ்ந்து, தனது பயணத்தை நிறைவு செய்திருக்கிறார் ச.அமுதன்!