Advertisment

'ஃபேஸ்புக்கில் அமுதா... நேரில் ஆண்...'- கொலையில் முடிந்த ஓர்பாலின வற்புறுத்தல்!   

'Amutha on Facebook ... Male in Real ...' - incident in madurai

ஃபேஸ்புக்வாயிலாகப் பெண் போல் பேசி காதலிப்பதாக ஏமாற்றியவரைக் கொலை செய்த சம்பவம் மதுரையில்நிகழ்ந்துள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்குஃபேஸ்புக்மூலம் அமுதா என்பவர் அறிமுகமாகி இருந்தார். அமுதாவுடன்ஃபேஸ்புக்கில்நீண்ட நாளாகப் பேசிவந்தமுருகன் அவரின்செல்போன்எண்ணை வாங்கி காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். இப்படியே இரண்டு ஆண்டுகள் இருவரும்செல்போனில்பேசி வந்த நிலையில், உன்னைச் சந்திக்க வேண்டும் என முருகன் அமுதாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி மதுரை வந்த அந்த நபர்ஃபேஸ்புக்கில்பழகிய அமுதா இல்லை ஒரு ஆண் என்பது தெரியவந்தது. நேரில் வந்த நபர் ஆண் என்பதை அறிந்து முருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Advertisment

தூத்துக்குடிஎட்டையபுரத்தைச்சேர்ந்த முருகன் என்பவர் அமுதா என்ற பெயரில் பேசி தன்னைஏமாற்றியதைத்தெரிந்துகொண்ட முருகன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்பொழுது அமுதா என்ற பெயரில் பேசி ஏமாற்றிய தூத்துக்குடி முருகன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும், ஓரினச்சேர்க்கையில்ஈடுபடகட்டாயப்படுத்தியதாகவும்கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சனைகாரணமாகக்காஞ்சிபுரம் முருகன் தூத்துக்குடி முருகனை அடித்துக் கொலை செய்துள்ளார். கடந்த 15ஆம் தேதி நடந்த இந்த கொலை சம்பவம்தொடர்பாகப்பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில்,காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.தற்பொழுது கொலையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் முருகனைபோலீசார்கைது செய்துள்ளனர்.

Thoothukudi police incident madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe