Amputation of Fingers of Fair-Price Shopkeeper; The photo of the criminals was released and there was a stir

சிதம்பரத்தில் நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவரை வெட்டியவர்கள் என இருவரது படம் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

சிதம்பரம் மெய்க்காவல் தெருவில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தமிழ்நாடு அரசு நியாய விலைகடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன்ராஜாவை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து தலையில் கத்தியால் வெட்டிக் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரது இரண்டு விரல்களையும் துண்டித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், அவர் சிதம்பரம் ராஜாமுத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி பீம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகளை ரகசியமான முறையில் கண்காணித்து வருகின்றனர்.

எனினும், வியாழக்கிழமையன்று சிதம்பரம் பகுதியில் உள்ளவர்களின் வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்சந்தேகத்திற்கிடமானமர்ம நபர்கள் இருவர்இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் செல்வதாக புகைப்படம் வெளியாகி அப்பகுதி மக்களிடையே வேகமாகப் பரவிவருகிறது. குற்றவாளிகள் அவர்களாக இருப்பார்களா எனும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இப்புகைப்படம்பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Advertisment