ADVERTISEMENT

கரோனாவுக்காக தமிழக அரசு செலவு செய்த தொகை... சட்டப்பேரவையில் அறிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

05:04 PM Sep 15, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் கரோனாவுக்கு தமிழக அரசு ரூ. 7,167.97 கோடி செலவு செய்துள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும் அதுதொடர்பாக விரிவாக தெரிவிக்கையில், தொழிலாளர்கள் நிவாரண தொகைக்கு ரூ. 4,896.05 கோடியும், தனிமைப்படுத்தலுக்கு ரூ. 262.25 கோடியும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க ரூ. 830.60 கோடியும் ,மருத்துவக் கட்டுமான பணிக்கு ரூ. 147.10 கோடியும், கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு ரூ. 638.85 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 243 கோடி ஒதுக்கப்பட்டது. கரோனாவால் ஏற்பட்டுள்ள செலவுகள் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT