Advertisment

‘எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாத பாட்டு எது?’ - கவிஞர் வைரமுத்து ருசிகரம்

NN

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது மேடையில் பேசிய அவர், ''பரத்வாஜ் கிளப் டான்ஸ் மாதிரி ஒரு பாட்டு கொடுங்க சார் என்றார். சும்மா வாய்மொழியாக சொன்னது 'சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்' இதெல்லாம் சரியா இருக்குமா என்று கேட்டேன். நல்லா இருக்கும் சார் என்று இசையமைத்து காண்பித்தார். எல்லாத்தையும் விட முக்கியமானது இந்திய சினிமா தோன்றி அதிகமான வரிகளால் பாடப்பட்ட பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்'. செஞ்சி மலை மீது அஜித் குமார் பாடிய பாட்டு; சரண் இயக்கிய பாட்டு; நான் எழுதிய பாட்டு 89 வரிகள் கொண்ட பாட்டு; எஸ்.பி.பி பாடிய பாட்டு.

Advertisment

எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாது என்று நீங்கள் கருதுகின்ற பாட்டு எது என்று ஒரு தொலைக்காட்சி ட்விட்டரில் ஒரு விளம்பரம் கொடுத்தது இன்றைக்கு. நான் ஆச்சரியமாக புரட்டி பார்த்தேன். அதில் சொல்லப்பட்டிருக்கிற முதல் பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ அடுத்து'சங்கீத ஜாதி முல்லை' அடுத்து'அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி' அடுத்து'என் காதலே என் காதலே' நான்கும் என் பாட்டு. இது ஆச்சரியமாக இருந்தது. அதில் முக்கியமான பாட்டு 89 வரிகள் கொண்ட 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டு. திரும்ப தமிழில் இப்படி ஒரு பாட்டு வரவே முடியாது. அந்தப் பாட்டுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ்'' என்றார்.

Advertisment

music song spb Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe