சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் வடமாநிலத்தைசேர்ந்த மோகித் என்பவர் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மேலே பறந்துவந்த காத்தாடி நூல் 3 வயது குழந்தை அபினேஷின் கழுத்தில் பட்டதில் குழந்தையின் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த குழந்தை அபினேஷ் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஆர்கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில். கொருக்குப்பேட்டை காமராஜர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (20) மற்றும் 15 வயது சிறுவனை அதிரடியாக கைது செய்தனர். மாஞ்சா நூலை பயன்படுத்தி, பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாஞ்சா நூல் பட்டம் விட்ட இருவர் கைது!
Advertisment