தமிழகத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தங்களது தேர்தல் பணிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்றத் தொகுதியின் அமமுக வேட்பாளராக அப்புபால் என்கிற நிறுவனத்தின் உரிமையாளர் பாலாஜி என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தல், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தல், செயல்வீரர்கள் கூட்டம் என பரபரப்பாக இயங்கிவந்தார்.
இன்று (17 மார்ச்) கட்சி நிர்வாகிகளோடு தேர்தல் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி காரணமாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அமமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.