ammk trichy city district secretary senthilnathan appointed and leader statue

Advertisment

அமமுகவின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக, திருச்சி மாநகர 47 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் என்பவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்தது உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அமமுக கழக தலைமை நிலைய செயலாளர், செய்தி தொடர்பாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் ,மாவட்ட அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் திருச்சி மாநகரில் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெரும்பிடுகு முத்தரையர், வ.உ.சிதம்பரனார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.