/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/xcdsgdtgetete.jpg)
சென்னையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்.கரோனாவுக்கு சென்னை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாழ்வைத் தொடங்கிய வெற்றிவேல் பின்னர் அதிமுகவில் இணைந்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஆர்..கே நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். பின்னர் 2014 ஜெயலலிதாவுக்காகஎம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு 2016-ல் நடை பெற்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ ஆனார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ்-சசிகலா அணியாக கட்சி பிரிந்தபோது சசிகலாவை ஆதரித்தார். பின்னர் தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் பிரிந்த போது அதில் வெற்றிவேலும் இடம் பெற்றிருந்தார். அரசுக்கு எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது வெற்றிவேல் மீண்டும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார்.தினகரனை தொடர்ந்து ஆதரித்து வந்த வெற்றிவேல் தற்பொழுது டிடிவி தினகரனின்அமமுகவில் பொருளாளராக பதவி வகித்து வந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)