p class="text-align-justify">
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அமமுகவின் முக்கிய நிர்வாகி புகழேந்தி சந்தித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. முதல்வரை சந்தித்து பேசி வருவதால் அதிமுகவில் புகழேந்தி இணைகிறாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.டிடிவி தினகரனை விமர்சித்து புகழேந்தி பேசியதாக வீடியோ வெளியானதால், இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இந்நிலையில் அதிருப்தியில் இருந்த புகழேந்தி தற்போது முதல்வரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.