அமமுகவின் முக்கிய நிர்வாகியான புகழேந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைகிறார்.
சேலம் மாவட்டத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் அதிமுகவில் இணைவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் புகழேந்தி விரைவில் அதிமுகவில் இணையவுள்ளார்.
அமமுகவின் துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கும், புகழேந்திக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து புகழேந்தி கோவையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அதை தொடர்ந்து சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புகழேந்தி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.