Advertisment

பொங்கல் விழாவில் தமாகாவில் இணைந்த அமமுகவினர்  

 Ammk joined TMC in Pongal festival

Advertisment

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி சார்பில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அதன் இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் ஆகியோர் பொங்கல் வைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அ.ம.மு.க அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் அந்த கட்சியில் இருந்து விலகி த.மா.கா.வில் இணைந்தனர். தொண்டரணி சரவணன், இளைஞரணி தலைவர் ரமேஷ், மார்க்கெட் சஞ்சய் பிரபாகரன் உட்பட போல கலந்து கொண்டனர்.

ammk tmc
இதையும் படியுங்கள்
Subscribe