Advertisment

தகவல் தொழில் நுட்பத்துக்குள் நுழையும் டி.டி.வி.தினகரன்!

AMMK - information technology - ttv dinakaran

Advertisment

கரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது. இதில் திமுக மட்டும் விதிவிலக்கு!

அரசியல் நடவடிக்கைகள், கட்சி சார்ந்த விவாதங்கள் என திமுகவினருடன் அடிக்கடி ‘ஜூம்’ செயலி மூலம் காணொலி காட்சி வழியாக ஆலோசிக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதில் விவாதித்து எடுக்கப்படும் முடிவுகளுக்கேற்ப திமுகவின் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் திமுகவின் அரசியல் நடவடிக்கைகள், இந்த ஊரடங்கினால் முற்றிலும் முடங்கிவிடவில்லை.

இந்த நிலையில், அ.ம.மு.க.கட்சியின் ஐ.டி. விங்க் நிர்வாகிகள், ‘ஜூம்’ செயலியை பயன்படுத்தி கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் விவாதிக்கும் அரசியல் நடவடிக்கைகளை தினகரன் எடுக்க வேண்டும் என அவரிடம் யோசனை தெரிவித்துள்ளனர். கரோனா காலத்தில், எடப்பாடி பழனிசாமிஅரசின் நடவடிக்கைகளை அறிக்கை மூலம் விமர்சிப்பதையும் கடந்து, இப்படிப்பட்ட ஆலோசனைகள்தான் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் என கட்சியின் மா.செ.க்கள் சிலரும் தினகரனை வலியுறுத்தியிருக்கிறார்கள். அதனால் தகவல் தொழில் நுட்பத்துக்குள் தினகரனும் நுழையவிருக்கிறார் என்கின்றனர் அ.ம.மு.க.வினர்.

informationtechnology ammk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe