ammk incident in pudukottai

அ.ம.மு.க கொடி ஏற்றி பீடத்தில் அமைக்கப்பட்ட கல்வெட்டு, அடுத்த நாள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள பெரியாளூர் கிழக்கு கிராமத்தில், கடந்த ஜனவரி மாதம் அ.ம.மு.க கட்சியின் சார்பில், புதிய கொடிக் கம்பம் நடப்பட்டு கட்சிக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு, கடந்த 4 -ஆம்தேதி அப்பகுதியில் அ.ம.மு.கநிர்வாகிகளின்ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகள் அதே ஊரில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றி கொடிக் கம்பத்தின் கீழ், பீடம் அமைத்து புதிய கல்வெட்டும் திறந்தனர். அந்தக் கல்வெட்டில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

Advertisment

இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி திறக்கப்பட்ட அ.ம.மு.ககல்வெட்டு, 5 ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்து அக்கட்சி பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து பெரியாளூர் கிழக்கு ராமசாமி மகன் இளங்கோ (வயது 35) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரில்.. எங்களது கட்சி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளால் கொடியேற்றி திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். ஆகவே, கல்வெட்டை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறி உள்ளனர். கீரமங்கலம் போலீசார் கல்வெட்டை உடைத்த மர்ம நபர்கள் யார் என்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அ.ம.மு.க கல்வெட்டு உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment