Advertisment

அமமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம்... புது மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார்.

Advertisment

முதற்கட்டமாக 19 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

AMMK Executives Change ... New District Secretaries Announced!

அதன்படி,சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக -கண்ணன்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக -பொன் ராஜா, திருவள்ளூர் மேற்கு- ஏழுமலை, திருவள்ளூர் தெற்கு- லக்கிமுருகன், கடலூர் கிழக்கு-கார்த்திகேயன், கடலூர் மேற்கு கே.எஸ்.கே.பாலமுருகன், கடலூர் வடக்கு -முருகன், விழுப்புரம் வடக்கு- கௌதம் சாகர், விழுப்புரம் தெற்கு -பாலசுந்தரம், கள்ளக்குறிச்சி வடக்கு- ராஜாமணி, கள்ளக்குறிச்சி தெற்கு-கோமுகி மணியன், ஈரோடு மாநகர்- தங்கராஜ், ஈரோடு புறநகர்- செல்வம், தேனி -முத்துசாமி, விருதுநகர் கிழக்கு-ஜெயராஜா, திருநெல்வேலி மாநகர்- பரமசிவ ஐயப்பன், திருநெல்வேலி புறநகர் வடக்கு -சோ மாரியப்பன், திருநெல்வேலி புறநகர் தெற்கு -குமரேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ammk politics
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe