கரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க, மக்கள் தங்கள்வழக்கமான வாழ்க்கையை நிறுத்தி, உயிர் வாழ்வாதற்காக போராடி வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தின் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் ‘பசி’யை ஆற்றுவதற்கு அதுவும் குறிப்பாக ஏழை, ஆதரவற்றோர், சாலைகளில் வசிப்போர், கடைநிலை தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பணிபுரிபவர்கள் உணவின்றி அல்லல்படும் சூழல் உருவானது.
googletag.pubads().definePassback('/1009127/Nakkheeran_DBS_Carousal', [[1, 1], [300, 250]]).display();
இந்த சூழலில்தான் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். காய்கறி உட்பட அத்தியாவசிய தேவைகளுக்காகமட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர்,அதுவும் நேரக்கட்டுப்பாட்டுடன். இவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது அம்மா உணவகம்தான்.
கட்சி பேதம் இன்றி அனைத்து அரசியல் கட்சியினரும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கரோனா நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உள்ளதாலும்,கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்பட்டு உள்ளதாலும்அம்மா உணவகத்தில் ஏழை மக்கள் உணவு அருந்தி வருகின்றனர். ஏழைகளுக்கு உதவும் பொருட்டு 3 வேளையும் சாப்பாடு 1 - ந்தேதி முதல் வருகிற 14 ந் தேதி வரை திருச்சி மரக்கடை அம்மா உணவகத்திற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக வழங்க அம்மா மக்கள் முன்னேற்றக்கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியத்திடம் முதல் கட்டமாக ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அப்போது சிறுபான்மை பிரிவு மாவட்ட பொருளாளர் பஷிர் உடன் இருந்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
பலதரப்பட்ட கட்சியினர் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய நிலையில் அம்மா உணவகத்திற்கு தினகரன் கட்சியைச்சேர்ந்த மாநகர செயலாளர் அம்மா உணவகத்திற்கு நிதி கொடுத்தது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.