Advertisment

அமமுக சார்பில் 500 பேருக்கு நிவாரண உதவிகள் 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவுறுத்தலின்படி, பொருளாளர் மண்டல பொறுப்பாளர் பி.வெற்றிவேல் ஆலோசனைப்படி, தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் வ.சுகுமார் பாபு அவர்கள் முன்னிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி அமமுக சார்பில் பகுதியை சார்ந்த அனைத்து வட்டங்களிலும் உள்ள நலிவடைந்த கழகதோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் 10 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களான அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை, துவரம் பருப்பு ஆகியனவும், முக கவசமும், ஏழை, எளியோருக்கு பிரியாணி பொட்டலமும்சேப்பாக்கம் பகுதி கழகத்தால் வழங்கப்பட்டது.

Advertisment

 nakkheeran app

இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட அமைப்பு சாரா செயளாலர் S. சந்தான கிருஷ்ணன், அம்மா தொழிற் சங்க பேரவை மாவட்ட செயலாளர் G. ஜெயமூர்த்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் M.தனம், MGR மன்ற மாவட்ட செயலாளர் MGR கணேஷ், மாவட்ட மீனவ அணி செயலாளர் மீனவ மகேந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

Advertisment

உடன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியை சார்ந்த அனைத்து வட்ட கழக செயலாளர்களும், பொறுப்பாளர்களும்பகுதி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி கழகமான சிந்தாரிபேட்டை அலுவகத்தில் இருந்து 500 பேருக்கு இன்று நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி கழக செயலாளர் L.ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.

help corona virus Chennai ammk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe