Advertisment

ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் கொடுக்க அதிமுக திட்டம்:காவல் வாகனத்திலேயே பணம்- தங்க தமிழ் செல்வன் பேட்டி

தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரும், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டி போடுகிறார்கள்.

Advertisment

AMMK

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த மூன்று பேருக்கும் இடையேதான் தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் பரிசுப்பெட்டிக்கு ஆதரவு கேட்டு மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

அப்பொழுது பத்திரிகையாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வனோ..‌.

பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் அதிமுக டெபாசிட் இழக்கும். நாட்டில் எத்தனையோ மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் போது அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்காக அதிலேயும் ஓபிஎஸ் தனிப்பட்ட வேண்டுகோளுக்காக மோடி தேனிக்கு வந்து பிரச்சாரம் செய்துள்ளார். இது இந்திய அரசியல் வரலாற்றில் வெட்கக்கேடாக இருக்கிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக 50 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஆனால் தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை ஆனால் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை செய்யும் வருமான வரித்துறையினர் ஓபிஎஸ் வீட்டில் சோதனை மேற்கொள்ளலாமே. தேனி தொகுதிக்கு ஆயிரம் கோடி செலவு செய்யும் ஓபிஎஸ் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்காதது ஏன் தேனி தொகுதியில் அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு 20ஆயிரம் வரை பணம் கொடுக்க இருக்கிறார்கள்.

அந்த பணத்தினை போலீஸ் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகினறன.அதை ரோடுகளிலும், தெருக்களிலும் பகிரங்கமாகவே வைத்து பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வெட்கக்கேடாக இருக்கிறது என்று கூறினார்.

election campaign interview Thangatamilselvan ammk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe