தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது.
வாக்குப்பதிவு நாள் நெருங்கிவரும் நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி அமமுகவேட்பாளர் கொல்லிமலை சந்திரன் அதிமுகவில் இணைந்துள்ளார். திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அமமுக வேட்பாளர் சந்திரன் அதிமுகவில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.