தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் நேர்காணல்,தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று (04.03.2021) அதிமுகவில் விருப்ப மனுஅளித்தவர்களிடம் ஒரே நாளில் அதிமுக தலைமை நேர்காணல் மேற்கொண்டது.அதேபோல திமுகவில் நான்காவது நாளாக இன்றும்நேர்காணல் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில்அமமுக சார்பில்விருப்ப மனு அளிக்கமார்ச் 10ஆம் தேதிவரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில்,மார்ச்10ஆம் தேதிக்குப் பதில்மார்ச்7ஆம் தேதி மாலை 5 மணிக்குள்விருப்பமனு அளிக்க வேண்டும். மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர்நேர்காணல் நடைபெறும் என அமமுக தலைமை தெரிவித்துள்ளது.