ammk candidate announced erode east election

Advertisment

பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான அதிமுகவில் வேட்பாளர் தேர்வில், கட்சியின் சின்னம் கிடைப்பதில் பல சிக்கல்களும் இடையூறுகளும் தொடர்ந்து நடந்து வரும் இச்சூழலில், இரண்டாவது கட்சி வேட்பாளராக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளராக ஆனந்த் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்கள். அவரும் ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் தனது கட்சி வேட்பாளராக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவப்பிரசாத் என்பவரை அறிவித்துள்ளார். இந்த சிவப்பிரசாத் ஈரோடு கிழக்கு தொகுதியில் மெஜாரிட்டியாக மிக கணிசமான வாக்குகள் கொண்ட முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.