amman

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில்வே பீடர் ரோடு அருகே சாமிசிலை ஒன்று கிடப்பதாக சிதம்பரம் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அலுவலகத்தில் பணியில் உள்ள காவலாளி குமார் என்பவர் தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சிதம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சிலையை கைப்பற்றி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாமி சிலை 56 சென்டிமீட்டர் 26 கிலோ கொண்டுள்ள அம்மன் சிலை ஆகும், வெங்கலத்தால் செய்யப்பட்டுள்ளது. சாமி சிலையின் நான்கு கைகளில் இரண்டு கைகள் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஐபோன் சிலையாக இருக்கும் என்றும் சந்தேகமாக உள்ளது

Advertisment

இதுகுறித்து சிதம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இது கடத்தப்பட்ட சிலையா? என விசாரணை செய்து வருகிறார்கள்.