சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றங்களை விசாரிப்பதற்காக தமிழக காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு தனிக்காவல் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் இந்த பிரிவு செயல்பட்டு வருகிறது.
இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு ஏற்பாடு செய்து வருகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சென்னையிலுள்ள 35 மகளிர் காவல்நிலைத்திற்கு பிங்க நிற ரோந்து வாகனம் வழங்கப்படவுள்ளன.
இந்த காரில் ’AMMA PATROL’ எனவும், ஹெல்ப் லைன் எண் 1091,1098 என்றும் பதிவிட்டு உள்ளனர். 24 நான்கு மணி நேரமும் ரோந்து பணியில் இருக்குமாம். அடுத்த வாரத்தில் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கிவைக்கவுள்ளார். இந்த திட்டம் மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து நடத்தும் திட்டமாகும்.