சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வேகமாகப் பரவி வரும் கரோனாவைகட்டுப்படுத்த, இந்த 4 மாவட்டங்களிலும் நேற்று (19.06.2020) முதல் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மாவட்டங்களில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தளர்வுகள் நீக்கப்பட்டு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், அம்மா உணவகங்கள் எப்போதும் போல செயல்படும், தொடர்ந்து இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே, சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகம் உட்பட அனைத்து அம்மா உணவகங்களிலும் மக்கள் இலவச உணவை பெற்று உண்டனர்.

Advertisment