காயிலாங்கடைக்கு போகும் அம்மா கிரைண்டர்கள்; மர்ம நபர்கள் கைவரிசை

 Amma Grinders going to Waste shop; Mysterious gang

காஞ்சிபுரம் காவலர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்காக விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் விலையில்லா கிரைண்டர்கள் பல ஆண்டுகளாக ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளுக்கு வழங்கியது போக மீதமுள்ள அம்மா கிரைண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் புழக்கத்தில் இல்லாத சில அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல்விட்டதால் சிலமர்ம நபர்கள் உள்ளே புகுந்து கிரைண்டர்களை எடுத்துச் சென்று காயலாங்கடையில் எடைக்கு போடுவதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக இவை மக்களுக்கும் கொடுக்கப்படாமல் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதை எப்படியோ நோட்டமிட சில மர்ம நபர்கள், ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லாமல் நாள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று என கிரைண்டர்களை உடைத்து எடுத்து சென்று காயிலாங்கடையில் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

kanjipuram police TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe