Skip to main content

மோடி கொடுத்த இந்த டின்னர் தாங்க எங்களுக்கு லாஸ்ட்.. அதிமுக எம்எல்ஏ கலகலப்பு...

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

இந்தியளவில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 23ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு என ஊடகங்கள் வெளியிட்டுள்ள முடிவுபடி இன்று பாஜக அதன் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து டெல்லியில் விருந்து வைபவம் செய்தது. இதில் தமிழகத்திலிருந்து அதிமுகவின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இந்திய அரசியலில் வட நாட்டு தலைவர்களின் வருகை ஒருபுறம் இருக்க, தென் நாட்டு தலைவர்களின் வருகை என்றால் அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகிய இருவர் மட்டுமே என இருந்தது. இன்று பாஜக மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு தனது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் விருந்தில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரிடம், “எப்படி இருக்கிறீர்கள் என கேட்டதோடு, ரிஸல்டுக்கு பிறகு கவலைப்படாதீர்கள் பார்த்துக்கலாம்” என இந்தியில் கூறியிருக்கிறார்கள். அதற்கு ஓ.பன்னீர் செல்வம்,  “மோடி ஜீ எங்களை இன்னும் இரண்டு வருடம் கொண்டு செல்ல வேண்டும்” என கூற மோடி ஓபிஎஸ் தலையில் தட்டி வாழ்த்து கூறியிருக்கிறார். அதன் பிறகு கூட்டணி கட்சி தலைவர்களின் விருந்து வைபவம் நடந்தது.
 

modi

 

 

இந்த நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக எம் எல் ஏ நம்மிடம் பேசும்போது “சார், இன்று நடந்தது பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்களின் விருந்துதான். ஆனால், எங்களுக்கு இது லாஸ்ட் டின்னர் காரணம் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி வெற்றிபெற கூடிய சூழல் இல்லை இதை தெரிந்துதான் மோடியும் அமித்ஷாவும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸை அழைத்து விருந்து கொடுத்துள்ளார்கள். இந்த விருந்துடன் டெல்லி போக்குவரத்து ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் முடிந்துவிட்டது என கலகலவென சிரித்தார். 
 

ashoka hoel

 

இந்த எம்எல்ஏ கூறுவது போல அதிமுக பாஜக கூட்டணி என்பது இந்த தேர்தலின் முடிவுகளை பொறுத்தே இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமித்ஷாவின் சொத்து மதிப்பு?; வெளியான விவரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Published details Amit Shah's net worth

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, நேற்று தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதில், முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. குஜராத் மாநிலம், காந்தி நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். அதன்படி, அமித்ஷா தனது வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் செய்த வேட்புமனுவில் அவருடைய சொத்து மதிப்புடைய பிரமாண பத்திரமும் இணைக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. 

அமித்ஷாவின் பிரமாண பத்திரத்தில், அவருக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகள், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமித்ஷாவின் ஆண்டு வருமானம் 2022 - 23 ரூ.75.09 லட்சம் எனவும், அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார்.