Amit Shah's visit ... AIADMK MLAs ordered by appear? Disgruntled senior leaders!

பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, நாளை தமிழகம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில்,அமித்ஷா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,இதனால்மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில்இருப்பதாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

மத்திய அமைச்சர் அமித்ஷா, திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வாய்க் கண்டிகையில்புதிய நீர்தேக்கத்தை திறந்து வைக்க இருக்கிறார்.அதேபோல், மெட்ரோ ரயில் திட்டத்திற்கும்அடிக்கல் நாட்டுகிறார். மத்திய அமைச்சர் தமிழகம் வர இருப்பதால், இந்த நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் என அனைவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதால் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள்அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment