amit shah

Advertisment

2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று (09.07.2018) சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை மாநில நிர்வாகிகள் வரவேற்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

விமான நிலையத்தில் இருந்து வி.ஜி.பி. தங்க கடற்கரைக்கு சென்ற அவர், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து, பா.ஜ.க. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் பங்கேற்றவர்களிடம் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது தொடர்பான உத்திகள் குறித்து பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தார்.