amit shah madhavan nayar

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார்.

Advertisment

அமித்ஷா முன்னிலையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கட்சியில் இணைந்தார். அவருடன் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் ஜி.ராமன் நாயர், பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவர் பிரமிளா தேவி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கர்ணாகுளம் மாவட்ட துணைத்தலைவர் திவாகரன் நாயர், மலங்காரா தேவாலயத்தின் தாமஸ் ஜான் ஆகியோரும் பாஜக,வில் இணைந்தனர்.

Advertisment

இஸ்ரோ தலைவராக கடந்த 2003 முதல் 2009 வரை மாதவன் நாயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.