amit shah came tamilnadu vellore bjp meeting

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் மத்திய அரசும், பாஜகவும்பல்வேறு நிகழ்ச்சிகளைநடத்தி வருகின்றன. மேலும் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் கடந்த மேமாதம் 30ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும்மத்திய அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் விளக்க பொதுக் கூட்டங்களைநடத்த பாஜக முடிவெடுத்துள்ளது. இதையடுத்து பல்வேறு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலூரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 8ம் தேதி நடக்க உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.

Advertisment

இந்த பொதுக் கூட்டமானது வேலூர் அடுத்த கந்தனேரிஎன்ற பகுதியில் நடைபெறவுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் கந்தனேரிக்கு செல்கிறார். இந்த பொதுக் கூட்டமானது பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். இந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அரசின் சாதனைகளை பற்றி அமித்ஷா பேச உள்ளார். பொதுக் கூட்டத்திற்கான வரவேற்புமற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்தீவிரமாக நடந்து வருகின்றன.