Skip to main content

அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா! 

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

American Muthami University Graduation Ceremony!

 

உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் பெருமையும் பூரிப்பும் அடையும் அளவிற்கு சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று அமெரிக்காவில் உருவாகியிருக்கிறது. இதை முனைந்து உருவாக்கி இருப்பவர் ‘தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின்’ பங்குதாரர்களில் ஒருவரும், படைப்பாளரும், பெருந்தமிழருமான தாழை இரா.உதயநேசன் ஆவார். 

 

இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். ‘அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிப் பணிகள், தமிழ் அமர்வுகள், இலக்கண இலக்கிய வகுப்புகள், தமிழ் வகுப்புகள், படைப்பிலக்கியப் பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை நடத்த இருக்கிறது. அதோடு, தமிழின் சிறந்த படைப்பாளர்களைத் துறைவாரியாகத் தேர்வு செய்து, சிறப்பு முனைவர் பட்டங்களையும் இந்தப் பல்கலைக் கழகம் வழங்க இருக்கிறது. இதற்கான அங்கீகாரத்தையும் இந்தப் பல்கலைக் கழகம் பெற்றிருக்கிறது. 

 

இந்தப் பல்கலைக் கழகத்தின் வேந்தராக டாக்டர் இரா.உதயநேசனும், துணைவேந்தராக டாக்டர் ஆல்வினும், பதிவாளராக முனைவர் கோ.பாட்டழகனும் இயங்கிவருகின்றனர். அண்மையில் நடந்த பல்கலைக் கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வேந்தர் டாக்டர் இரா.உதயநேசன், துணைவேந்தர் டாக்டர் ஆல்வின் மற்றும் கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன், முனைவர் விஜயகுமாரி, முனைவர் சம்பத்குமார், கவிஞர் ரேணுகா ஸ்டாலின், டாக்டர் ஏ.ஜான் இளவரசு, வழக்கறிஞர் பூங்குழலி உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர். 

 

இந்த அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நாளை (18ஆம் தேதி) சால்வேசன் ஆர்மி அரங்கில் நடைபெறுகிறது. அதேபோல், பல்கலைக் கழகப் பெயர் பலகை திறப்பு விழாவும் நடக்கிறது. முனைவர் வி.ஜி.சந்தோசம் வாழ்த்துரை வழங்கி பல்கலைக்கழக பெயர் பலகையைத் திறந்துவைக்கிறார்.  

 

இந்தப் பட்டமளிப்பு விழாவில், முனைவர் பட்டம் பெறும் மதிப்புறு தமிழ் ஆளுமைகள்...

1) ஓவியக் கவிஞர்.அமுதபாரதி 
2) கவிஞர்.ஆண்டாள் பிரியதர்சினி
3) கவிஞர்.ஆரூர் தமிழ்நாடன் 
4 ) கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்  
5) பாவலர்.சரஸ்வதி பாஸ்கரன்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.