வேளச்சேரியை சேர்ந்த ஐடி ஊழியர் காதலித்து திருமணம் செய்தஅமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காஞ்சிபுரம் தேசியநெடுசாலையில் அனாதையாக அரைநிர்வாண கோலத்தில்விடப்பட்டு ஆட்டோ ஓட்டுனர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SEXUAL ABUSE

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

காஞ்சிபுரம் தேசியநெடுஞ்சாலையில் வெளிநாட்டு பெண் ஒருவர் அரைநிர்வாண கோலத்தில் சாலையில் வரும் வாகனங்களை கல்லால் தாக்கி கொண்டிருந்தார். இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு கொண்டு பெண் காவலர்களை வைத்து விசாரித்ததில் அவர் பெயர் வெல்லா என்றும் அமெரிக்காவை சேர்ந்தவர் என்று தெரியவந்தது மேலும் இவர் முகப்புத்தகம் மூலம்சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஐடி ஊழியரான விமல் என்பவரை காதலித்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

SEXUAL ABUSE

ஒரு சமயத்தில் வேலையை இழந்த விமல் அன்றாட செலவுக்கே தவித்து வரும் நிலையில் மனைவியான வெல்லா மது போதைக்கு அடிமையாகி உள்ளார். எனவே என்ன செய்வது என்று தெரியாமல் விமல் தன் சொந்தஊருக்கு போகலாம் எனக்கூறி காரில் கூட்டி சென்றுள்ளார்.அப்போது காஞ்சிபுரம் தேசியநெடுஞ்சாலையில் வெல்லகேட் பகுதியில்காரிலிருந்து வெல்லாவை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின் மது போதையில் தடுமாறி கொண்டிருந்த வெல்லாவை மூன்று ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டி சென்று அவருக்கு மேலும் மது வாங்கி கொடுத்து அவரை அருகிலுள்ள காட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் அவரை அதே சாலையில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அடுத்தநாள் வெல்லா மனநலம் பாதிக்கப்பட்டு அரைநிர்வாண கோலத்தில் சுற்றியுள்ளார் அங்கு வரும் வாகனங்களை கல்லால் தாக்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அது குறித்து ஐந்து பேரை கைது செய்து மர்மமான இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் வெல்லாவை விட்டு சென்ற விமலையும் தேடி வருகின்றனர்.