Advertisment

திருச்சி டி.ஐ.ஜி.க்கு அமெரிக்க விருது!

American Award for Trichy DIG!!

Advertisment

'கேடயம்' என்ற திட்டத்தின் கீழ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகத்தைஉருவாக்கிக் கொண்டிருப்பதற்காக திருச்சி டிஐஜி ஆனி விஜாயாவிற்கு விருது வழங்கப்பட்டது.

'சபேர்'என்ற இந்த நிறுவனம், அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. இதில்,ஆசியாமற்றும் பசிபிக் கண்டத்திற்கு உட்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில், இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது.

American Award for Trichy DIG!!

Advertisment

பல்வேறு துறைகளில் தங்களுடைய பணிகள் மூலம் பாதுகாப்பையும், வளா்ச்சியையும் தரும் சிறந்த நபா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு விருது வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது இந்த நிறுவனம்.

இந்நிலையில் திருச்சி டிஐஜி ஆனிவிஜயா,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமுதாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார் என அறிந்து அந்நிறுவனம் இந்த 'சபோ்'விருதினை வழங்கியிருக்கிறது.

அதற்கான பாராட்டு விழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமெரிக்காவைச் சோ்ந்த ஹெஸ்டா் செசிலியா, சபோ் நிறுவனத்தின் இயக்குநா்மற்றும் சபோ் ஏபக் நிறுவனத்தின் செயல் அதிகாரி பிரதாப், ஐ.எம்.ஜே. துணைத் தலைவர் தேவசித்தம் உள்ளிட்டவா்கள் கலந்துகொண்டு, இந்த விருதினை டிஐஜி ஆனிவிஜயாவிற்கு வழங்கிக் கௌரவித்தனா்.

awarded police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe