Published on 02/01/2022 | Edited on 02/01/2022

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த மருத்துவர் சுந்தரேஷ்-க்கு அமெரிக்காவின் சர்வதேச அறுவை சிகிச்சை துறையின் உயரிய விருதான 'அமெரிக்கா காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்த விருது கரோனா காலம் என்பதால் இணையவழி மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான சான்று தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர் ஐரோப்பாவிலிருந்து வழங்கப்படும் அறுவை சிகிச்சைக்கான 'ராயல் காலேஜ்' விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.