​
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இவர்கள் வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது குடும்பத்தினர், இவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள், இவர்கள் வசித்த பகுதியினர் என சுமார் 900 பேர் பல்வேறு வகைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tiruppattur345.jpg)
17 பேரின் குடும்பத்தாரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவைகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி நகரங்கள் முழுமையாக 100 சதவிதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வங்கிகள், அஞ்சலங்கள் கூட மூடப்பட்டுள்ளது.
ஆம்பூர், வாணியம்பாடி நகரங்களைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகரமும் 100 சதவித ஊரடங்கு ஏப்ரல் 18 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நகரத்தையும் முழுமையாகக்கண்காணித்து வருகின்றனர் காவல்துறையினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)