Ambur

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 6 வயதில் நிதிஷ் மற்றும் 5 வயது லோகேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இரு மகன்களும் ஜூலை 3 ந் தேதி வீட்டின் அருகே உள்ள கதவாளம் மலைப்பகுதிக்கு சென்று விளையாடி கொண்டிருந்தனர்.

Advertisment

அவர்கள் விளையாடும்போது திடீரென ஒரு பாறை உருண்டு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகள் மீது விழுந்தது. குழந்தையின் அலறல் மற்றும் அழுகை சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிப்போய் குழந்தைகளை மீட்டனர். அதில் நிதிஷ் சம்பவ இடத்திலேயே பலியானான். தம்பி லோகேஷ் படுகாயம் அடைந்தான்.

Advertisment

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்த சிறுவன் லோகேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நிதிஷ் சடலத்தை மீட்டு உடற் கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் மீது பாறை விழுந்து பலியான சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.