Advertisment

ரயிலில் வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரயில்நிலையத்தில் குழந்தை பிறந்தது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியை சேர்ந்த விஜயா என்ற பெண் பெங்களூரில் அக்டோபர் 21 ந்தேதி விடியற்காலை பெங்களூரு வில் தனது ஊருக்கு செல்ல ஆம்பூர் நகருக்கு பிருந்தாவனம் ரயிலில் வந்துள்ளார்.

Advertisment

ambur incident

ரயிலில் வரும்போதே அவருக்கு லேசாக வலி வந்துள்ளது. பிரசவ தேதி நெருங்காததால் சூட்டுவலியாக இருக்கும் என பொருத்துக்கொண்டு வந்துள்ளார். ஆம்பூரில் ரயிலை விட்டு இறங்கியபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

Advertisment

அங்கிருந்து உடனே செல்ல வண்டிகள் இல்லாத நிலையில் வலி அதிகமாகி அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த பெண்மணிகள் சிலர் உதவிய நிலையில், ஆம்பூர் ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்ல அவர்கள் வந்து குழந்தை மற்றும் தாய்யை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளனர். தகவல் தெரிந்து உறவினர்கள், குடும்பத்தார் பின்னர் மருத்துவமனைக்கு வந்தனர்.

காலை நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால் பரபரப்பாக இருந்தது.

ambur BABY BOY railway station
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe