Skip to main content

ஆம்பூரில் தடை உத்தரவை மீறி திறக்கப்பட்ட இரண்டு கடைகளுக்கு சீல்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கரோனா தொற்று பரவாமல் இருக்க ஆம்பூர் நகரம் முழுவதும் 100 சதவிதம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள வங்கி, கடைகள் எதுவும் இயங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 13- ஆம் தேதி முதல் ஆம்பூர் நகரம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. இதனைத் தீவிரமாகக் கண்காணித்தும் வருகின்றனர்.
 

 

 

 

ambur area shops seal officers

 

இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி பஜார் பகுதியில் மாவுமில்லும், வளையல்கார தெரு பகுதியில் செயல்பட்டு வந்த ஜெனரல் ஸ்டோர் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு மக்கள் கூட்டமாக வந்து நின்று இருந்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் காவல்துறை மூலமாக வருவாய்த் துறையினருக்குச் சென்றுள்ளது. உடனடியாக வருவாய்த்துறையினர் அங்குச் சென்று வந்த தகவல் உண்மையா? என ஆய்வு செய்தனர். உண்மை என தெரியவந்ததும், இதுப்பற்றி ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவள்ளிக்குத் தகவல் தந்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் தாசில்தார் செண்பகவள்ளி தலைமையில் வருவாய்த்துறையினர் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சென்று சீல் வைத்தனர்.

வாணியம்பாடி நகரமும் 144 தடை உத்தரவை 100 சதவிதம் கடைப்பிடிக்கப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கும் தீவிரக் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பைசா செலவில்லாமல் சுகப்பிரசவம்! கவனிக்க வைக்கும் எதிர்ப்பு

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
People are struggle by posting notices in a different way demanding  repair road

திருப்பத்துார் மாவட்டம், பொம்மிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாதனவலசை, பழத்தோட்டம், ஓம்சக்தி நகர் கூட்டுரோடு பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கின்றனர்.

இந்நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிகின்றது. இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள் இப்படிக்கு ஊர் மக்கள் சார்பில், என குறிப்பிட்டு நோட்டீஸ் ஒன்று சுற்றுவட்டார கிராமங்களில் விநியோகம் செய்துள்ளனர் மேலும் பொம்மிக்குப்பம் பல்வேறு பகுதிகளில் நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளனர். 

அதில், இன்றைய காலகட்டத்தில் பல கர்ப்பிணிப் பெண்களின் கனவு சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்று கொள்வதுதான். இவர்களின் கனவை நனவாக்க அதிசய சாலை திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ளது. எத்தனையோ மருத்துவர்கள், மகப்பேறு காலத்தில் அறுவை சிகிச்சை செய்தால் தான் தாயும் சேயும் நலமாக இருப்பார்கள் என்று சொல்வது உண்டு. இதனால் மருத்துவ செலவை எண்ணி நினைக்கும் போதே கர்ப்பிணிப் பெண்கள் மனமுடைந்து விடுகின்றனர். 

People are struggle by posting notices in a different way demanding  repair road

அவர்களின் துயரத்தை போக்கத்தான் இங்கு அதிசய சாலை உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த சாலையில் தற்செயலாக பயணம் செய்யும் போதே சுகப்பிரசவமாக குழந்தை பெற்று உள்ளனர் என அச்சடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குறிப்பு எனக்கூறி, அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள், பொம்மிகுப்பம் ஊராட்சி மன்றத்தின் முறையான அனுமதி பெற்ற பிறகே பயணம் செய்ய வேண்டும். மீறி கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்தால், நாங்கள் பொறுப்பல்ல என்பதை தங்களின் பணிவான கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வித்தியாசமாக தங்களது எதிர்ப்பினை அந்த கிராம மக்கள் வெளிக்காட்டியுள்ளது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

Next Story

பெற்றோர்களின் எதிர்ப்பால் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Love couple takes refuge in police station due to opposition from parents

பெற்றோர்களின் எதிர்ப்பால் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பி.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வேலுமணி மகன் தினேஷ்குமார்(26) ஊதுபத்தி கம்பெனியில் மெக்கானிக்காக பணியாற்றுகிறார். ஆம்பூர் அடுத்த சானாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் மகள் ஜீவிதா(21) கத்தாரி பகுதியில் தனது தாத்தா வீட்டில் தங்கி ஊதுபத்தி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

கடந்த ஆறு மாதங்களாக தினேஷ்குமார் மற்றும் ஜீவிதா காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வீட்டில் பெற்றோர்களிடம் காதலித்து வருவதாகத் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.  

இந்நிலையில், காதலர்கள் இருவரும் தங்களுடைய காதலை மறக்க முடியாமல் பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி, வீட்டை விட்டு வெளியேறி ஆந்திரா பகுதிக்குச் சென்று திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல்துறை, காதலர்களின் பெற்றோர்களை அழைத்து இருவரும் மேஜர் என்பதால் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.