இந்தியா முழுக்க கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிவருகிறது. பல இடங்களில் படுக்கைகளும், ஆக்ஸிஜனும் கிடைக்காமல் பெரும் இன்னலுக்குள்ளாகும் நிலை இருந்து வருகிறது. தமிழகத்திலும் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சில நாட்களாகவே கரோனா தொற்றுள்ளவர்களுக்குப் படுக்கைகள் எளிதில் கிடைக்காமல் மருத்துவமனை வெளியில் ஆம்புலன்ஸில் காத்திருந்து படுக்கைகள் பெரும் நிலைமை இருந்துவருகிறது. இந்நிலையில், இன்றைய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நிலையைப் படங்களில் காணலாம்.