Advertisment

ஆம்புலன்ஸ் மோதி டிவி மெக்கானிக் கொலை

ambulance van and two wheeler incident police investigation

விருதுநகர் மாவட்டம், பட்டாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் புதன்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் அக்ரஹாரப்பட்டி பாலத்தில்சென்று கொண்டிருந்த போதுஅவசர ஊர்தி மோதியதில் உயிரிழந்தார். தகவலறிந்துசென்ற காவல்துறையினர்சங்கரலிங்கத்தின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

விபத்து குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அவசர ஊர்தி இரு சக்கர வாகனத்தில் மோதி விட்டுநிற்காமல் சென்றது தெரியவந்தது. வாகனத்தின் பதிவெண்ணை கொண்டு அவசர ஊர்தி ஓட்டுநரான ராமசாமி புறத்தைச் சேர்ந்த முருகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

தனது தொலைக்காட்சியைப் பழுது நீக்கித் தர 1,500 ரூபாய் பெற்றுக்கொண்ட சங்கரலிங்கம், பணியை முடிக்காத நிலையில், பணத்தையும் திருப்பித் தராததால்அவசர ஊர்தியை மோதிக் கொலை செய்ததாக முருகன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த காவல்துறையினர்முருகனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Ambulance
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe