ambulance

Advertisment

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு தடை கோரி செல்வராஜன் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ப்பி.ட்டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொழிலாளர் துறை சார்பில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றுள்ளதாகவும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதை ஏற்ற நீதிபதிகள் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு முடித்து வைத்தனர்.